என் வகுப்பறை

                          ஒருவழியாக கடந்த 17நாட்களாக என் வகுப்பறையை சுத்தம் செய்து இந்த பருவத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து முடித்து விட்டேன்.


முடித்த பின் பார்த்தால் ஒன்றுமே செய்யாதது போல் இருக்கிறது. 

                           முதல் 8 நாட்கள் துணைக்கருவிகள் தயாரித்து பின் வகுப்பறையை மாற்றி கணினிகளை சரிசெய்து அடுத்த பயணத்திற்கு தயாராகிவிட்டேன். 

விடுமுறையில் உலகம் சுற்ற ஆசைதான் ஆனால் நம்மையே உலகமாக நினைக்கும் குழந்தைகளுக்கு முதலில் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்றுதான் மனம் விரும்புகிறது...

 ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி.

தீவிர மாணவர் சேர்க்கை விழா

எங்கள் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான விளம்பர பதாகை.
இது விளம்பரம் அல்ல... 
ஒவ்வொன்றும் எங்கள் பள்ளியில் நாங்கள் செய்வதே...
வாருங்கள் வந்து பாருங்கள் எங்கள் பள்ளியை...
எங்கள் குழந்தைகளின் அறிவுத்திறமையை...
 குழந்தைகளை குழந்தைகளாக நடத்தும் பள்ளி அரசு பள்ளிகள் மட்டுமே.
மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
கட்டணம் இல்லா ஆங்கிலவழி தமிழ்வழி கல்வி பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் கொண்டபள்ளி நம் 

ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி.

எங்கள் பள்ளியின் மனமார்ந்த நன்றி..

எங்கள் பள்ளியின் சுவற்றில் வரையப்பட்டுள்ள தலைவர்களின் படங்கள்.
 பள்ளியின் மீது அக்கறை கொண்டு இப்படங்களை வரைந்து கொடுத்த நல் உள்ளங்களுக்கு எங்கள் பள்ளியின் மனமார்ந்த நன்றி.ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி.